சென்னைக்கு விரைந்துள்ள இராணுவ படை?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் திகதி நீர்ச்சத்துக்குறைவாக இருந்ததனால் முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 73 நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

நேற்றைய தினம் முதல்வருக்கு, மாரடைப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், இன்று மதியம் முதல்வரின் நிலை கவலைக்கிடம் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதில் இருந்து, தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் முகங்களில் சோகம் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.இதற்கிடையில் முதல்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்ததனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏழு அடுக்க பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சென்னைக்கு 1650 துணை இராணுவப்படையினர் அனுப்பப்பட்டிருப்பதாக தற்பொழுது தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.