வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கு ஜனாதிபதி விஷேட அழைப்பு – இலங்கை தொடர்பில் இப்போது மகிழ்ச்சி..!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வைத்தியர்கள், தங்களது உறவினர்கள், நாடு உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் கருத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்றைய தினம் மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் சேர்ந்த விஷேட வைத்தியர்கள் உட்பட சுமார் 15000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் தற்போது சேவை புரிந்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் மீண்டும் குறிப்பிட்ட காலம் வரை சரி இலங்கையில் பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் நாட்டைவிட்டு விட்டு வெளிநாடுகளில் சென்று சேவை செய்யும் வைத்தியர்கள் இலங்கையை கருத்திற் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அதிகளவான வைத்தியர்களில் ஒரு பகுதியினர் சரி மீண்டும் இலங்கை வர விருப்பம் இருப்பின் அவர்களுக்கு விசேட அழைப்புகளையும் விடுக்கின்றேன்.

அப்படி அவர்களில் இலங்கை வருவார்களாயின் அவர்களுக்கு இலங்கையின் தற்போதைய தேவை குறித்து விளக்கம் அளிக்கவும் அவர்கள் தொடர்பில் விஷேட கவனங்கள் எடுக்கப்படும்.

எதிர்கால இலங்கையை கருத்திற் கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இலங்கையை அபிவிருத்தி பாதையில் கட்டியெழுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், இப்போது இலங்கையில் மருத்துவ சேவை மற்றும் சுகாதார சேவை வளர்ச்சியடைந்தமையை முன்னிட்டு நாம் அனைவரும் மகிழ்வடைகின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.