நாளைய தினம்சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒருஅவசர அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாக உள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.ஜே.எம். புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதும் போது செல்லிட பேசிகள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் கைக் கடிகாரங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு ஐந்தாண்டு கால தடை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது இவ்வாறு ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய 12 பரீட்சார்த்திகளுக்கு இவ்வாறு ஐந்தாண்டு கால பரீட்சைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பரீட்சைப் பெறுபேறுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் இந்த விடயத்தை கருத்திற் கொண்டு பரீட்சைக்கு தோற்ற வேண்டியது அவசியமானது.