நறுமண பொருளாக சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.
எனவே நாம் தினமும் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, சுடுதண்ணீரில் சோம்பு சேர்த்து கலந்து குடித்து வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடரை போட்டு 15 நிமிடம் மூடிய நிலையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டி உணவு சாப்பிடுவதற்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது பின்பு குடிக்க வேண்டும்.
சுடுநீருடன் சோம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- செரிமான தன்மையை ஊக்குவிக்கிறது.
- கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.