மனித மூளையின் எடையானது ஆண்கள் மற்றும் பெண்களை பொருத்து மாறுபடுகிறது.
ஆண்களின் சராசரி மூளையின் எடை 1260கிராம், பெண்களின் சராசரி மூளையின் எடை 1130 கிராம் ஆக உள்ளது.
இந்த மனித மூளையானது, கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த வித மாற்றமும் ஏற்படாமல், அதே அளவில் தான் இருக்கிறது.
மூளை ஒரு பெரிய ‘அக்ரூட்‘ பழம் போன்றும் ஈரம் நிறைந்த அழுக்கு நிறத்திலும் இருக்கும். இந்த மூளையை வைத்து தான் நம் வாழ்க்கையில் அடையும் முன்னேற்றம் இருக்கிறது.
உலகிலேயே மிக மிக ஆச்சரியமாக உள்ளது மனிதனின் மூளை. ஏனெனில் அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் மற்றும் செல்கள் உள்ளது.
ஒவ்வொரு செல்களிலும், ஆயிரம் கோடி நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் நிறைந்துள்ளது.
மனித மூளையின் இந்த உயிரணுக்களுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனமாக செயல்படுவது தான் நம்முடைய சிந்தனைகள் ஆகும்.
ஒரு மனிதன் உயிர் வாழும் வரை மூளையில் இருக்கும் செல்களுக்கு இடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.
நமது மூளையின் அளவுக்கும், நாம் செயல்படும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்புகள் ஏதும் இல்லை. ஏனெனில் ஓவ்வொருவரின் புத்திசாலித்தனம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட யோசிக்கும் திறன் ஆகும்.
மனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நாம் பிறக்கும் போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது.
அதேபோல் நம்முடைய இளமை முடிந்து, முதுமையை அடையும் போது நமது மூளையின் எடையும் குறையத் தொடங்குகிறது.
பொதுவாக இதுவரை அதிக எடை கொண்ட மனித மூளையின் எடையானது 2 கிலோ 49 கிராம் என்ற அளவில் இருந்தது.
ஆனால் ஒரு சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும்.
ஒருவருடைய மூளையின் அடர்த்தி என்பது அவரின் மூளையில் உள்ள மடிப்புகளை குறிக்கும்.
எனவே மூளையின் அடர்த்தியான, மூளையின் மடிப்புகள் தான் ஒருவருடைய புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது.