வதந்தி பரப்பிய தந்தி டிவி!!.. ரங்கராஜ் பாண்டே பதவி விலக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!!

முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற தவறான சிகிச்சையை பரப்பிய தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே பதவி விலக கோரி சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகிறது .

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி முதலில் வெளியானது தந்தி தொலைக்கட்சியில் தான். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே செய்தி வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அந்த செய்தி காட்டு தீ போல பரவ தமிழகத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. இதனால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சுழல் உருவாகி தமிழகமே ஸ்தம்பித்தது.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்ய கோரியும், ரங்கராஜ் பாண்டே பதவி விலக கோரியும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.