அம்மா யார் என்று தெரியுமா !

அவர் சிறந்த முதல்வரா
இல்லையா தெரியாது,
அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பலனளித்தனவா தெரியாது, எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களை செய்திருக்கிறாரா தெரியாது, கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா தெரியாது, தமிழகத்தின்  மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா தெரியாது,
இது எதுவுமே
தெரியாமல் போனாலும்
ஒன்று மட்டும் நன்றாகத்தெரியும், இத்தனை ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர்!
இவர்களை போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படி சாதிக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான்! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று,
வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்த தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!
சம காலத்தில் வாழ்ந்த இதைவிட சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!
அவர் வருவாரோ மாட்டாரோ தெரியாது, ஆனால் அவருடைய வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம்! அந்த நெருப்பு பயணத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து கஷ்டங்களை கடந்துவிடுவார்கள்! குறைகள் பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது! இயற்கை அவர் பக்கம் நிற்கவே வேண்டுகிறேன்!