ஊமைப்பெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு கிடைத்த தண்டனை?

திருகோணமலை – மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 38 வயதுடைய ஊமைப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கு இன்று விசாணைக்கு வந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் இன்று(5) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் திருகோணமலை அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சுஜித் பிரேமரத்ன(30வயது) என்பவரே குற்றவாளி என தெரிவிக்கப்படுகின்றது.