பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் சாசன சபையில் ஒரு விவாதம் நடைபெறவுள்ளது. எம்மை பொறுத்தவரை பிளவு படாத, பிரிக்க முடியாத ஒரு நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
எமது மக்களின் இறைமையின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். இறைமை என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
இதேவேளை, இலங்கையில் வாழும் அனைவரும் ஒருமித்து வாழ வேண்டும் என்ற கருத்து தற்போது மக்கள் மத்தியில் நிலவுவதாக டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.