தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன்னர் காலமானதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் பெருமக்களும், அதிமுக தொண்டர்களூம் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் எடுத்து கொண்டு செல்ல சிறப்பு வாகனம் சென்றுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் அவர் உடல் இன்னும் ஒருசில நிமிடங்களில் போயஸ் கார்டன் நோக்கி செல்லும் என்று கூறப்படுகிறது.
மேலும் அரசு மரியாதையுடன் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சமாதி அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.