2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இணையதள வாசகர்கள் மத்தியில், சிறந்த மனிதர் யார் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், டொனால்ட் டிரம்ப், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மற்றவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார், 2014ம் ஆண்டிலும் மோடியே சிறந்த மனிதராக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.