ஜனாதிபதி , பிரதமருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 15 பேருக்கு நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியுள்ளது.

ஐ. தே. க. முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கத்தில் போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட பதினைந்து பேரை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.