தமிழகத்தின் மாபெரும் ஆளுமை மறைந்து விட்டது..! முப்பது வருட அரசியலின் பெரும் சக்தி..!
இன்னொருவரால் நிரப்ப முடியாத வல்லமை பெற்றவர்..! முதல்வர் பதவியில் இருக்கும் போதே மரணத்தைத் தழுவியர்கள் மூன்று பேர் மட்டுமே..
அறிஞர் அண்ணா..! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..! புரட்சிதலைவி ஜெ.ஜெயலலிதா..! அறிஞர் அண்ணா இறந்தபோது தமிழகமே வெறி கொண்டு அழுதது..பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் சென்னையில் குவிய நூற்றுக் கணக்கானோர் இறந்தனர்..!
அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் ரிக்கார்டில் இடம் பிடித்தது..அந்த அளவு ஜனத் திரள்..! மக்கள்திலகம் எம்ஜிஆர் இறந்தபோதும் சென்னை ரணகளப் பட்டது.
இதோ முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார்…!
இறைவா முதல்வரின் ஆன்மா சாந்தி பெறட்டும்..!