மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்டோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மற்றொரு தனி வரிசையில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள அவரது தலைக்கு அருகில் சசிகலா மற்றும் திவாகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
அதேபோல், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஜெயலலிதாவுக்கு இடது புறம் நாற்காலியில் அமர்ந்து அஞ்சலி நிகழ்வை கவனித்து வருகிறார்.
இதனிடையே, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உடலுக்கு முன்பாக படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து உள்ளனர்.