தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த செய்தியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.