தமிழக முதலமைச்சருக்கு வடமாகாணசபையில் இரங்கல்!

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வடக்கு மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரங்கல் உரையையும் நிகழ்த்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 67ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்றைய சபை ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் வடமாகாணசபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பில் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு, வடமாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

முதலமைச்சரின் உரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.