தமிழக முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை மதியம் 2 மணியுடன் மூடுமாறு யாழ்.வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்றய தினம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களை மாலை 2 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை கட்டி அஞ்சலி செலுத்துமாறு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் ஒலி பெருக்கி ஊடாக வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.