ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் தன்னுடைய அனுதாபத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவினால் வடமாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.