காஸ்பாத், என்கிற வார இதழில் மீண்டும் ஜெயலலிதா திரைப்பட துறைக்குவர போராடுகிறார் என ஒரு செய்து வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஜெயலலிதா எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் 1980களில் தனக்கான பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு அ.தி.மு.க கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இதன் காரணமாக வட மாநில நாழிதழ் ஒன்று ஜெயலலிதா சினிமா வாய்ப்பிற்காக போராடி வருவதாக செய்தி வெளியிட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஜெயலலிதா அந்த நாளிதழின் செய்தி ஆசிரியருக்கு கடிதம் எழுதினார்.
அதில் தயாரிப்பாளர் பாலாஜி எடுக்கும் பில்லா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக தன்னை அணுகியதாகவும், ஆனால் அதை தான் ஏற்க மறுத்ததால் நடிகை ஸ்ரீ பிரியாவிற்கு அந்த வாய்ப்பு போனது என கூறியுள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் தமிழில் சூப்பர்ஸ்டார் என்றும், பாலாஜி மிக பெரிய தயாரிப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ள அவர் தான் இந்த வாய்ப்பை மறுத்தது தங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
நான் கடவுள் அருளால் போதிய நிதி ஆதாரத்தோடும், நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு மனதிற்கு பிடித்த வாய்ப்புகள் கிடைக்காததால் மட்டுமே தான் நடிக்க மறுப்பதாக கூறியுள்ளார். ஜெயலலிதா எழுதிய கடிதம் இதோ உங்களுக்காக