பொதுவெளியிலேயே கண்ணீர் விட்டு அழுத #விஜய் – நெஞ்சை உழுக்கும் சம்பவம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இந்நிலையில், முதல்வரின் உடல் வைக்கப்படிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு சரியாக 08:12 மணிக்கு வந்த நடிகர் திரு.விஜய் கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார். பொது வெளியில், முதல் முறையாக கண்ணீர் சிந்திய நடிகர் விஜய்-யை பார்த்த அவரது ரசிகர்கள் எங்கள் தளபதியை இந்த நிலையில் பார்த்தது இல்லை என சமூக வலைதளங்களில் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.