மூக்கில் இருக்கும் சொரசொரப்பை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

நமது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் சருமத்தில் தங்கி விடுகிறது.

இதனால் நமது தோலின் சருமத் துளைகள் அடைக்கப்பட்டு, நாளடைவில் அந்த இடத்தில், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் புள்ளிகளாக மாறுகிறது.

எனவே தான் நம் மூக்கின் மீது சொரசொரப்பான கருமை நிறம் உள்ள பருக்கள் ஏற்படுகிறது.

நமது மூக்கின் மீது ஏற்படும் சொரசொரப்பு தன்மையை போக்க சூப்பரான இயற்கை வழிகள் சில உள்ளது, அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மூக்கின் மீது ஏற்படும் சொரசொரப்பை நீக்க என்ன செய்ய வேண்டும்?
  • சிறிதளவு ஓட்ஸ் பொடியுடன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்து 20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • க்ரீன் டீ பொடி அல்லது இலையை அரைத்து நீரில் கலந்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்ய வேண்டும். இதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.
  • சிறிதளவு உப்பு மற்றும் கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளி இடத்தில் தடவி, உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • கோதுமை மாவு மற்றும் சர்க்கரை 2 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் பன்னீர் கலந்து, பேஸ்ட் செய்து, பின் அதை முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால், சருமத்தின் மென்மை தன்மை அதிகரித்து, சொரசொரப்பு நீங்கிவிடும்.