ஜோதிடம், ஜாதகத்தில் பலருக்கும் நம்பிக்கை இருக்கும், பலருக்கு இருக்காது.
ஆனால் ஒன்று, ஜோதிடத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் நிஜத்தில் பல நடந்துள்ளன. அப்படி தான் தற்போது அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சம்மந்தமாக ஒரு கருப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தமிழ்மாதங்கள் படி இது கார்த்திகை மாதமாகும். ஜோதிட புத்தகத்தில் இந்த கார்த்திகை மாதத்தில் அரங்கேறப்போகும் விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், நல்ல மழை பெய்யும் விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று நாட்டையே உலுக்கிய விடயம் சம்மந்தமாக ஒரு முக்கிய குறிப்பு அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது எட்டாம் இடத்தில் சந்திரன் உலவும் இந்த நேரத்தில் மூன்று கிரகங்கள் ஒன்று நோக்குகிறது.
இப்படி நடப்பதால் மிக பிரபலமான பெண் ஒருவரின் இழப்பு ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் சூரியனும், சனியும் ஒரே புள்ளியில் இணைவதால் அரசியலில் இருக்கும் ஒரு முக்கிய பிரபலஸ்தரை இழக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் திகதி கிழிக்கும் காலண்டரிலும், ஒரு அறையில் மரணம், அடுத்த அறையில் வாரிசு சண்டை என எழுதப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் போல இந்த கார்த்திகை மாதத்தில் தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி என அழைக்கபெற்ற ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார்.
மேலும் அதிமுக அடுத்த இடத்துக்கு சசிகலா தரப்பில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வருவதும் இதன் மூலம் உண்மையாகிறது.