அம்மா என்றால் அன்பு’… சொந்தக்குரலில் பாடி சொக்க வைத்த ஜெயலலிதா..!! (வீடியோ)

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல்வளமும் மிக்கவராக திகழ்ந்தவர். சிறுவயதிலேயே பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றவர் ஜெயலலிதா. சினிமாவில் நுழைந்து சிறந்த நடிகை எனப் பெயரெடுத்த அவர், தனது இனிமையான குரலால் சில தமிழ்ப்படங்களில் பாடல்களும் பாடி அசத்தியுள்ளார்.

இதோ அவற்றின் விபரமாவது… – அடிமைப்பெண் படத்தில், ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடல் – சூரிய காந்தி படத்தில் ஓ மேரி தில் ரூபா… – சூரியகாந்தி’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து ‘நான் என்றால் அது அவளும் நானும்’என்ற பாடலின் இடையில் ஆங்கிலத்தில் வசன நடையுடன், அற்புதமான உச்சரிப்பில்ஜெயலலிதா பாடி இருப்பார். – வந்தாளே மகராசி படத்தில் ‘கண்களில் ஆயிரம்’… -.

வைரம் படத்தில் ‘இரு மாங்கனி போல்’… – அன்பைத்தேடி படத்தில் ‘சித்திர மண்டபத்தில்’… – திருமாங்கல்யம் படத்தில் ‘திருமாங்கல்யம் கொள்ளும் முறை’… – திருமாங்கல்யம் படத்தில் ‘பொற்குடத்தில் பொங்கும் எழிற் சுவையோ’… – உன்னை சுற்றும் உலகம் படத்தில் ‘மெட்ராஸ் மைல்’…

இவை சினிமாவில் ஜெயலலிதா பாடிய பாடல்கள் ஆகும். இது தவிர, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘மாறி வரும் உலகினிலே…’, ‘மாரியம்மா முத்து மாரியம்மா…’, ‘காளி மகமாயி கருமாரியானவளே…’, ‘தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்…’ போன்ற பக்திப் பாடல்களையும் ஜெயலலிதா ஆல்பங்களில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

jaya