சிவாஜி கணேசன் நடித்த கர்ணா படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனது தயார் சந்தியாவுடன் சென்றார் ஜெயலலிதா.
இயக்குனர் பி.ஆர்.பந்துலு அப்போது அவர் இயக்க இருந்த ‘ சின்னத கொம்பே’ படத்தில் நடிக்க, பிரபல நடிகர் கல்யாண் குமாருக்கு ஜோடியாக ஒரு புது முக நாயகியை தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது விழாவிற்கு வந்திருந்த ஜெயலலிதாவை பார்த்த பி.ஆர். பந்துலு, சந்தையின் அனுமதியோடு ஜெயலலிதாவை கதாநாயகியாக அறிமுக படுத்தினார்.
அப்போதுதான் பள்ளி படிப்பை முடித்திருந்த ஜெயலலிதா, 2 மாதத்தில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லுரியில் சேர இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
முதலில் ஜெயலலிதாவை நடிக்க வைக்கவே தயங்கிய சந்தியா 6 வாரங்களில் பட பிடிப்பு முடிந்து விடும் பிறங்கு எந்த தொந்தரவும் இருக்காது என உறுதி அளித்ததன் பேரிலேயே நடிக்க வைத்தார்.
அனால் இந்த படம் மாபெரும் வெற்றி பேரவே , ஜெயலலிதாவிற்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கியது. காலத்தின் கட்டாயம் அவரை நடிகையாக மாற்றியது.
அவரது கல்லூரி படிப்பு கனவாக மாரி விட்டது.
ஜெயலலிதாவிற்கு சட்டம் படித்து வக்கீலாக வேண்டும் என்பது தான் விருப்பம், அனால் அந்த எண்ணங்கள் நிறைவேறாவிட்டாலும் அவரது வாழ்க்கை யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்திற்கு சென்றார்.
அதிலும் பலருக்கு அம்மாவாக மாறியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.