குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுப்பது ஆபத்தா?

முந்தய காலத்தில், குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் மற்றும் பாலாடை ஆகியவற்றைக் கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்து, குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தை முதல் 3-6 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுத்து, சில ஆண்டுகளுக்கு பின் பாக்கெட்பால் அல்லது பால்பவுடர் ஆகியவற்றை தாய்மார்கள் அதிகமாக கொடுக்கின்றார்கள்.

பொதுவாக குழந்தைகளுக்கு தாய்பால் தான் பிரதான உணவு. ஆனால் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் பாலை அடைத்து கொடுப்பதால், கிருமித் தொற்றுகள் எளிதில் பரவி குழந்தைகளின் ஆரோக்கியத்தையே கெடுக்கிறது.

இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது, சுகாதாரமான முறையை, தாய்மார்கள் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

எனவே குழந்தைகளின் 10 மாதத்தில் இருந்தே குழந்தையை டம்ளரில் பால் குடிக்கப் பழக்கிவிடுவது ஒரு சிறந்த முறையாகும்.

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
  • பிளாஸ்டிக் பால் புட்டிகளில் நன்றாக காய்ச்சிய பாலை ஊற்றி குழந்தையின் வாயில் வைத்து கொடுப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல.
  • பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்கும் போது, ஆர்டினரி பாட்டில்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • குழந்தைகளைப் படுக்க வைத்து பால் புட்டியில் பாலை ஊற்றிக் கொடுக்க கூடாது. ஏனெனில் இதனால் குழந்தைகளுக்கு எளிதில் புரையேற வாய்ப்புள்ளது.
  • குழந்தைகளில் பால் பாட்டில்களை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாட்டிலில் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவு கிருமிகள் தடுக்கப்படும்.
  • ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு பால் கொடுத்து விட்டு பாட்டிலை வெந்நீரில் கழுவ வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • ஒரே பால் பாட்டிலை வருடக்கணக்கில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாதம் ஒருமுறை குழந்தைகளின் பால் பாட்டிலை மாற்ற வேண்டும்.
  • குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், பால் பாட்டிலை சுத்தமான ஓர் இடத்தில் கழுவி மூடி வைக்க வேண்டும்.
  • குழந்தைகள் பசும்பால், பாக்கெட் பால் குடிக்க ஆரம்பிக்கும்போது, ஸ்பூன், டம்ளர் என்று தாய்மார்கள் கொஞ்சம் குழந்தைகளுக்கு பழக்கத்தை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுப்பதை தவிப்பது மிகவும் நல்லது.