ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி காட்டிக் கொடுத்து விட்டு எவ்வாறு கொள்கைகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கேள்வி செய்தியாளர்களிடம் எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது பிளவுபட அது ஒரு பெயர் பலகை மாத்திரமல்ல என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தாம் கட்சியை பிளவுபடுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நாட்குறிப்பு அச்சிட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அவர் போலியான குற்றச்சாட்டு என்பதால் அதனை வாபஸ் பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
எனவே அது ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்றும் மஹிந்த தெரிவித்தார்.