* ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் 5 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
* ஆஸ்திரேலிய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோராக (378 ரன்) இது அமைந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 434 ரன்களும் (2006), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்களும் (2015) எடுத்த ஸ்கோர் முதல் இரு அதிகபட்சமாக நீடிக்கிறது.
* இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் மேட் ஹென்றி 91 ரன்களும், டிரென்ட் பவுல்ட் 80 ரன்களும் வாரி வழங்கினர். ஒரே ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் இருவர் 80 ரன்களுக்கு மேல் வழங்கியது இதுவே முதல் முறையாகும்.