மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி கருத்து வெளியிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் தலைக்கு இரண்டு துப்பாக்கி பிரயோகங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிய அவரின் முதல் அறுவை சிகிச்சை ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் இடம்பெற்றது.
இதன்போது அவரின் தலைப்பகுதியின் உள்ள தசையில் அரைவாசி பகுதி நீக்கப்பட்டது.
இது தொடர்பான அனைத்து மருத்துவ சான்றிதழ்களும் குறித்த மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளது. எவரொருவருக்கும் அதனை பரிசீலனை செய்து பார்க்க முடியும்.
இதேபோல், அவரது அபாயகரமான காயங்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் அறுவை சிகிச்சைகள் சிங்கப்பூர் மவுன்ட் எலிசெபெத் மருத்துவமனையில் இடம்பெற்றது. அது தொடர்பான அனைத்து மருத்துவ சான்றிதழ்களும் அங்கு உள்ளது.
இந்த அனைத்து மருத்துவ சான்றிதழ்களும் குறித்த மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் போது, துமிந்த சில்வாவின் உடல் நிலையில் பாதிப்பு இல்லையென்று எவராவது கூறுவாறாயின் அது மிகவும் வேடிக்கையான விடயம் என துமிந்த சில்வாவின் சகோதரியான திலினி சில்வா தெரிவித்துள்ளார்.
அவரின் தலையை துளைத்த ரவையின் பகுதிகள் தற்போது அவரின் மூளையில் காணப்படுகிறது. அவற்றை அகற்ற முடியாது. அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது வியத்தகு விடயமாகும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் துமிந்த சில்வாவின் சுகாதார நிலைமை தீவிரமாக கூடும்.
அதேபோல் வெளியில் மேற்கொள்ளப்படும் உளவியல் உளைச்சல் சூழ்நிலைகளினால் அவரது உயிருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது போன்ற வேடிக்கையான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களிடம் துமிந்த சில்வாவின் சகோதரி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையின் மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசெபெத் மருத்துவனையின் மருத்துவ சான்றிதழ்களை பரிசீலனை செய்து மருத்துவர்களிடம் கலந்துரையாடி துமிந்த சில்வாவின் உண்மையான உடல் நிலை குறித்து அறிந்து கொள்ளவும். அவ்வாறு இன்றி வேடிக்கையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சமூகத்தின் வேடிக்கையாளராக மாற வேண்டாம் என அவர் கேட்டுள்ளார்.