நவக்கிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர் கோவில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த இடுகம்பாளையத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் 13–ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஆலய சன்னிதிகளில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலை, வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்பி நின்றபடி கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இங்குள்ள ஆஞ்சநேயர், 8 அடி உயர சுயம்பு பாறையில், 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டவராக கம்பீரமான தோற்றத்தில், நேர் கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயத்தின் தெற்கே விநாயகர் கோவிலும், கன்னி மூலையில் ராமலிங்கேஸ்வரர் கோவிலும், வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோவிலும், அதன் அருகே பர்வதவர்த்தினி அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் கிடைக்க அருள்செய்பவர் என்றும் கூறப்படுகிறது.