அமைச்சரை நீக்கும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி

மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஷவுக்கான அமைச்சின் வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்வதற்கான சூழ்ச்சி ஜனாதிபதியின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவபிரியவை நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து மேற்கொண்ட கலந்துரையாடினார்.

இதன்பின்னர் மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு சோமவன்சவின் அமைச்சிற்காக வரவு செலவு திட்ட வாக்கெடுப்பை வெற்றி பெற செயற்வதற்கு இணக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ரஞ்சித் சோமவன்ஷவுக்கான அமைச்சின் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எப்படியிருப்பினும் மேல் மாகாண சபை கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஷவை பதவியில் இருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி ஒன்று அந்த மாகாண சபையில் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் கூறப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் மேல் மாகாண சபைக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் அந்த அமைச்சரின் அமைச்சிற்கான வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.