என் புகைப்படத்தை வெளியிடுங்கள்! நிறைவேறாமல் போன கடைசி ஆசை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாட்டால் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.

ஆனால் 4ம் திகதி மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்கள், சிகிச்சை பலனின்றி 5ம் திகதி அப்பல்லோவில் ஜெயலலிதா காலமானார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியதாம், மருத்துவர்களிடம், நான் வந்து எத்தனை நாள் ஆயிற்று? என கேட்டாராம்.

மருத்துவர்கள் சொன்னதும், ஐயோ இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும், அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்றாராம்.

ஜெயலலிதாவின் இந்த பதிலை கேட்ட மருத்துவர்கள் குழப்பத்துடன் சசிகலா-ம் தெரிவித்துள்ளார், ஆனால் சசிகலா, இப்போது தான் மக்களுக்கு அனுதாபம் கூடிக் கொண்டிருக்கிறது, நான் பார்த்துக் கொள்கிறேன் என பதில் அளித்தாராம்.

அதன்பின்னர் சில நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது கடைசி ஆசையை நிறைவேற்றாமலேயே போய்விட்டது என மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.