பிச்சை எடுத்தவர் ஜெயலலிதா உதவியால் வக்கீலானார்! இளம்பெண்ணின் உண்மை கதை

சிறுவயதில் சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், மறைந்த ஜெயலலிதா செய்த பண உதவியால் பின்னர் படித்து வழக்கறிஞர் ஆன சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தற்போது பிரபல வழக்கறிஞராக இருப்பவர் நாகரத்னா(32).

இவர் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், அவர் தன் வாழ்க்கை கதையை சொல்வதை கேளுங்கள்.

நான் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள், என் பெற்றோருடன் நான் மைசூரில் உள்ள சாலையில் தான் சிறுவயதில் வசித்து வந்தேன். ஏனென்றால் எங்களுக்கு வீடு கிடையாது.

நான் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வந்தவுடன் தெருவில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை என் பெற்றோரிடம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

2001ஆம் ஆண்டு என் பத்தாவது பொது தேர்வில் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

சாலை விளக்கு வெளிச்சத்தில் தான் மாலை வேளையில் படித்தேன் என கூறும் நாகரத்னா நான் சாலையில் படித்து தேர்ச்சி செய்த விடயம் தினமணி நாளிதழில் வெளியானது.

அதை அப்போது பார்த்த ஜெயலலிதா கர்நாடக அதிமுக பொறுப்பாளர் புகழேந்தியிடம் என்னை சென்னைக்கு அழைத்து வர கூறினார்.

சென்னை அழைத்து வரப்பட்ட என்னை ஜெயலலிதா அவர்கள் சந்தித்து மேற்ப்படிப்புக்கு 1 லட்சம் ரூபாய் தந்தார்கள். மேலும் படிப்புக்கு இன்னும் எவ்வளவு செலவு ஆனாலும் தாம் தருவதாக உறுதியளித்தார்கள்.

அவர் தந்த 1 லட்சத்தை நான் வங்கியில் போட்டு அதில் வரும் மாத வட்டி மூலம் நன்கு படித்து LLB வக்கீல் படிப்பை முடித்தேன். தற்போது சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்து நன்றி கூற நினைத்த அவரின் கனவு நினைவேறமலேயே போய்விட்டது தான் சோகம்!.