முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் தொடர்ந்துக் கொண்டே உள்ளது.
ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட செய்திகள் வெளி வந்ததுடன் அவர் மரணமடைந்த தினத்தன்று மாலை வேளை அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதிலும் வைத்தியசாலை அதனை நிராகரித்தது.
பின்னர் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்ததாக அப்பலோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்து அறிக்கையை வெளியிட்டது.
இவ்வாறான சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் ஜெயலலிதா உயிரிழந்த தகவலை அறிந்த மோடி Facebook பக்கத்தில் இரவு 11.09 மணியளவில் தனது இரங்கல் பதிவு வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதா 11.30 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும் மோடி 11.09 மணிக்கு தனது இரங்கல் பதிவை வெளியிட்டது எப்படி? என இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.