சீனா நாட்டைச் சேர்ந்த லி சிங்-யோன் என்பவர் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.
மேலும் இவர் ஓரு மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்று அறியப்படுகிறார்.
ஆனால் இவரின் பிறப்பை பற்றி இன்று வரையும் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமலே உள்ளது.
லி சிங்-யோன் அவர்கள் 1736-ம் ஆண்டு பிறந்தார் எனவும், ஆனால் வரலாற்றின்படி பார்க்கும் போது இவர் 1677-ம் ஆண்டிலேயே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
லி சிங்-யோன் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் இவரது வயது 197 அல்லது 256 ஆக இருக்க வேண்டும்.
மேலும் இவர் இறப்பதற்கு முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்.
லி சிங்-யோன் கூறும் வாழ்க்கை ரகசியங்கள்
- லி சிங்-யோன் என்பவர் தன்னுடைய பத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் நாற்பது வருடங்கள் goji berries, lingzi, wild ginseng, he shou wu, gotu kola, மற்றும் rice wine போன்ற மூலிகை உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் தான் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்ததாக கூறுகிறார்.
- பின் இவர் 1749-ம் ஆண்டில் தனது 71வது வயது இருக்கும் போது சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராக சேர்ந்துள்ளதாக கூறுகின்றார்.
- லி சிங்-யோன் தன்னுடைய வாழ்வில் 23 திருமணங்கள் செய்துள்ளார். இதனால் இவருக்கு 200 குழந்தைகள் உள்ளது. ஒருநாள் இவரின் வாழ்வில் 500வருடங்கள் வாழ்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாக கூறியுள்ளார்.
- 500 ஆண்டுகள் வாழ்ந்த அந்த நபர் தான் லி-க்கு Qigong பயிற்சி மற்றும் சிறப்பு மூலிகை டயட் கற்பித்துள்ளார். இதனால் தான் இவர் நீண்ட ஆயுள் வரை வாழ முடிந்தது என்று கூறியுள்ளார்.
- லீ-யிடம் அவரது ஆயுள் இரகசியம் பற்றி கேட்டப்போது, அதற்கு அவர் ஆமை போல அமர்ந்து, புறா போல நடந்து, நாய் போல உறங்க வேண்டும். மேலும் இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
- சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150வது மற்றும் 200வது பிறந்த நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்த விஷயங்கள் உள்ளது. இதை தான் சீனாவின் செங்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் ஊர்ஜிதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- டைம் பத்திரிக்கையின் பிரதியில், இவர் 197 வயது வரை வாழ்ந்து, இவரின் பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்து, நிறைய மூலிகைகளை தன் 100 வயது வரை சேகரித்துள்ளார். பின் இவர் மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
- நமது முன்னேர்களே கூட சாதாரணமாக நூறு வயதை கடந்து வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் இயற்கை மற்றும் மூலிகை உணவுகளை அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு, தினமும் உடல் உழைப்பு நிறைந்த வேலைகள் செய்வதாக கூறுகின்றார்கள்.
- சீன இராணுவ அதிகாரி லீ தன்னுடைய 250 வயதில் இறந்த பிறகும் கூட நல்ல கண் பார்வை, விறுவிறுப்பான உடல் திறன், ஏழடி உயரம், நீளமான நகங்கள், சிவந்த நிறம் ஆகிய தோற்றத்தை கொண்டிருந்ததாக கூறுகின்றார்கள்.