நமது வீட்டில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளது.
அந்த வகையில், வடக்கு பக்கமாக ஜன்னல் வைத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும், முக்கியமாக, வடக்கு பக்கத்தில், குறைந்த பட்சம் இரண்டு அடிகள் இடம் விட்டு கட்டப்படும் வீடுகளுக்கு சிறப்பு அதிகம் உள்ளது என்று கூறுகின்றார்கள்.
ஏனெனில் வடக்கு திசைக்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பதால், லட்சுமி கடாட்சத்தை விரும்புபவர்கள் வீடு கட்டும் போது, வடக்கு திசையில் ஜன்னல் அமைத்து கட்டுவது மிகவும் நல்லது.
வடக்கு திசையில் ஜன்னல் அமைத்து கட்டுவதற்கு என்ன காரணம்?
- குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் என்ற ஒன்பது விதமான நிதிக் குவியல்கள் இருக்கின்றது. இவற்றில் சங்கமம் மற்றும் பத்மம் முதல் நிலை தகுதி பெரும் நிதிகளாக கருதப்படுகிறது.
- வடக்கு திசைக்கு அதிபதியான குபேரனின் சங்கநிதி, பத்மநிதி என்பவர்கள் தஞ்சை பெரிய கோவில் நுழைவாயில் பகுதியில் இரண்டு புறத்திலும் அமைந்திருக்கும். ஏனெனில் இவை இரண்டும் கோடீஸ்வர பூதங்களாக விளங்குகின்றார்கள்.
- கோவில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். அதே போல் நமது வீடுகளில் பணம் வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது நமது தோளில் மீது பாரத்தை ஏற்றி வைத்துக் கொள்வதைப் போன்றது. எனவே இந்த முறையானது, வேறு திசையை நோக்கி வாசல் வைத்துள்ள வீடுகளுக்கும் பொருந்தும்.
- நாம் வசிக்கும் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கி இருந்தாலும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படுமாறு இஅருக்க வேண்டும். இதற்கு ஏற்றது போல வடக்கு திசையில் ஜன்னல் அமைக்க வேண்டும். இதனால் நமது வீட்டின் வருமானம் அதிகரிக்கும்.