திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் வீடு திரும்பினார்.
நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி குணமாகியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் திமுக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.
கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.