முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் துக்கத்தில் இருந்து பொதுமக்கள் மட்டுமின்றி மீடியாவும் இன்னும் மீளவில்லை.
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் ஜெயலலிதா-சோ ஆகியோர்களின் நட்பு குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன் அவர்கள் கூறிய கருத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
சோ’வை பார்த்து ஜெயலலிதா, “நீங்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறீர்கள். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. உங்களுக்கு முன், நான் இறந்துவிட வேண்டும் என்பது தான் அது” என்று குறிப்பிட்டதாக முருகன் கூறினார்.
மேலும் அன்று ஜெயலலிதா சொன்னதைக் கேட்டபோது தனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை என்றும் ஆனால், அது உண்மையிலேயே நடந்திருக்கின்றதாகவும், சோ அவர்கள் இறந்த செய்தியைக் கேட்டதும் நான் இதை நினைத்துக்கொண்டதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.