யாழ் பல்கலைக்கழகம் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான மண்டபத்தை நிர்மாணித்தல், வயம்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் பாடநெறியை அறிமுகம் செய்வதற்காக ஆய்வுகூடக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.