பிறந்த மேனியாக தூங்குவதனால் இவ்வளவு நன்மைகளா !!

தினமும் பிறந்த மேனியாக தூங்குவதனால் பல்வேறு உடல்நல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி என்னதான் நன்மை கிடைக்கிறது என்கிறீர்களா.. இதோ உங்களுக்காக…

நல்ல உறக்கம் வருமாம் :

அமெரிக்க உறக்க மருத்துவ கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறுகின்றனர் எனில், உடையணிந்து உறங்குவதன் மூலம் உடலின் வெப்பம் வெளியேறுவதில் தடை ஏற்படுகிறதாம். அதனால் இயற்கையாக நீங்கள் உறங்கும் நேரத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்படுகிறதாம். அதனால் பிறந்த மேனியாக தூங்கினால் உடலின் வெப்பம் எளிதாக வெளியேறிவிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர்.

தொப்பை குறையுமாம் :

பிறந்த மேனி தூக்கமானது உங்கள் உடல் சூட்டை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உங்கள் உடல் குளிர்ச்சியான நிலையை அடைகிறது. உடல் குளிர்ச்சியாகும் போது ஹார்மோன்கள் நன்கு செயல்படுகிறது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கார்டிசோலின் அளவு குறைகிறது. இது உங்களது தொப்பையை குறைக்க உதவுகிறதாம்.

பெண்களுக்கு பாக்டீரியா தொற்று அபாயம் இல்லை :

பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இருந்து வாயு வெளியேற இது உதவுகிறதாம். இதனால் அவர்களுக்கு பாக்டீரியா தொற்று சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

செக்ஸியாக உணர வைக்கிறது :

உங்களை செக்ஸியாக உணர வைக்கிறது பிறந்த மேனியாக தூங்குவது உங்களை செக்ஸியாக உணர வைக்கிறது. மற்றும் காலை நேரத்தில் உடலுறவுக் கொள்வதற்கு தூண்டுதலாய் இருக்கிறதாம். காலை நேரத்தில் உடலுறவுக் கொள்வது உங்களது மனநிலையை சீராக்கும்.

குளிக்கவே வேண்டாம் :

உடலின் வெப்பம் வெளியேறுவதனால் வியர்வை நாற்றம் வராதாம். மற்றும் இரவு முழுதும் உங்கள் உடல் குளுமையாக இருந்ததனால் குளிக்க தேவை இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

உடலுறவு கொள்ள தூண்டுகிறது :

பிறந்த மேனியாக தூங்குவது உங்களை அதிகம் உடலுறவுக் கொள்ள தூண்டுகிறதாம்.

மன அழுத்தம் குறைகிறது :

நிர்வாணமாக தூங்குவது உங்கள் உடலும் மனதும் இலகுவாக உதவுகிறது. இதனால் உங்களது மன அழுத்தமும், சோர்வும் குறைகிறது.

 

தோல் சுறுக்கம் குறைக்கிறது :

பிறந்த மேனியாக தூங்குவதால், உடலில் உள்ள ஹார்மோன்கள் சீராக சுரக்கப்பட்டு தோல் சுருக்கம் குறைந்து நீங்கள் இளமையாக தோன்றுவீர்கள்.