தண்டப்பண அதிகரிப்பு யோசனையிலிருந்து 2 விடயங்கள் நீக்கம்?

வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோர் மீதான 25,000 தண்டப்பணம் அறவிடும் யோசனையில் 2 இரண்டு விடயங்கள் தொடர்பாக ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்வது தவறு என்று போக்குவரத்து கட்டளைச் சட்டத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அது பற்றி அரசு ஆராய வேண்டியுள்ளது.

அதேபோல், அதிக வேகம் பற்றியும் தெளிவற்றத்தன்மை காண்பபடுகிறது. வீதிகள் நவீனமயமாகியுள்ள நிலையில்,

எந்ததெந்த வாகனங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் எப்படியான வேக கட்டுபாடுகளை வழங்குவது என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் இவ்விரு விடயங்கள் தொடர்பில் பரிசீலக்கப்பட வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.