ஆட்டத்தை தொடங்கினார் சசிகலா… போயஸ் கார்டனில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அதிரடி ஆலோசனை!

ஆனால் உடனடியாக நேரடி அரசியலுக்கு வருவதை சசிகலா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தமது ஆதரவாளர்களை கட்சியின் பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வந்தாக வேண்டிய நிலையில் சசிகலா இருக்கிறார்.

இனியும் தாமதிக்காமல் கட்சிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள சசிகலா நேற்று மூத்த அமைச்சர்கள் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகளை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பொதுச்செயலர் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தமக்கு ஆகாதவராக இருந்தபோதும் பத்திரிகையாளர் சோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

இதேபோல் அடுத்தடுத்து கட்சிப் பணிகளில் தீவிர கவனத்தையும் ஆட்சியின் லகானை இறுகவும் பிடிப்பதில் சசிகலா முனைப்பு காட்டுவார் என்றே கூறப்படுகிறது.