“நான் அஞ்சலி செலுத்த போயே தீருவேன்! ‘ -புறப்பட்ட சசிகலா புஷ்பா…

தன் வாழ்வை ஒரு நடிகையாக ஆரம்பித்து, ஒரு அரசியல் தலைவியாக மாறி, தமிழக முதல்வராய் இருந்த  ஜெயலலிதா காலம் ஆனார் என்று அறிவித்தவுடன் சசிகலா புஷ்பா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கிளம்பினாராம்.

அவரது கணவர் பாய்ந்து தடுத்து காலில் விழுந்து கதறி அழுது, ‘மீண்டும் மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்காதே…சசி” என்று கதறினாராம்.

நேற்று காலை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கிற்கு கொண்டு சென்றவுடன்…மனம் கேட்காமல், கணவர் தடுத்தும் வீறு கொண்டு எழுந்து அஞ்சலி செய்ய புறப்பட்டாராம்.

ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து சசிகலா புஷ்பா…” ஜெயலலிதா என் அரசியல் ஆசான். அவரின் மறைவு அரசியல் ரீதியான என் பேரிழப்பு. அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட என்னை விடவில்லை என்பது என் வருத்தம். ” என்று சொல்லியுள்ளார்.

” அம்மா இறக்க முதல் 6 டென்ஷன்களில்…முதல் டென்ஷனே, சசிகலா புஷ்பா தான். இது அம்மாவை பற்றி பேசுவது தான் கேட்க முடியவில்லை’ என்று அதிமுக வட்டாரம் முணுமுணுக்கிறதாம்.