த்ரிஷாவின் முதல் படம் இதுதான்

கடந்த 15 வருடங்களுக்கும் மேல் நடித்து வரும் முன்னணி நடிகை த்ரிஷா தற்போது முதன்முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘நேரம்’ நாயகன் நிவின்பாலி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.

ஷ்யாம் பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் ஒரு விறுவிறுப்பான ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.