மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அறிந்துகொள்ளப்போனால், அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போன்று தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்.
அந்த அளவுக்கு மக்கள் மனதில் மட்டுமல்லாமல், தன்னைப்பற்றி வரலாறு பேச வேண்டும் என்பதற்காக பல சாதனைகளை படைத்துவிட்டுதான் சென்றுள்ளார்.
அவரை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள சில சுவாரசிய தகவல்கள்
- ஜெயலலிதா தனது 3 வயதில் பரதநாட்டிம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இவருடைய அரங்கேற்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.
- இவருக்கு 15 வயது இருக்கும்போது தனது தாய் சந்தியாவில் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வற்புறுத்தப்பட்டார்.
- இவரது முதல் திரைப்படம் பெரியவர்கள் மட்டுமே பார்க்ககூடிய திரைப்படம் என்பதால், தனது முதல் படத்திரை இவர் திரையரங்கில் பார்க்கவில்லை.
- தமிழ் திரையுலகில் முதல் முறையாக Sleveless ஜாக்கெட் அணிந்து நடித்த முதல் பெண் இவர்தான். ஒரு பாடலுக்கு அருவி வீழ்ச்சியில் வைத்து நடனம் ஆடியுள்ளார்.
- இவர் தனது சினிமா பயணத்தின் போது நடிகர் சோமன் பாபுவை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
- நடிகர் எம்ஜிஆர் – டன் அதிக படங்கள் நடித்து வெள்ளி விழா நாயகியாக வலம் வந்த இவர், காலப்போக்கில் அவர் மூலமாகவே அரசியலுக்குள் நுழைந்தார்.
- ஆங்கில புத்தம் வாசிப்பது என்பது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது பயணங்களின் போது அதிகமாக ஆங்கில புத்தகங்களை எடுத்துச்செல்வார். ஆங்கிலம் மட்டுமல்ல தமிழ் எழுதுவதிலும் கைதேர்ந்தவர்.
- ஜெயலலிதா தனது தோட்டத்தில் வேலை பார்த்து வந்த சிறுவயது வாலிபனின் படிப்புக்கு உதவியுள்ளார். போதிய வருவாய் இல்லாத காரணத்தால் தனது படிப்பை இடைநிறுத்தம் செய்த வாலிபர் ஒருவர், ஜெயலலிதாவின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜெயலலிதா அந்த வாலிபருக்கு பண உதவி செய்து, கணணி அறிவியல் படிப்பினை தொடர்வதற்கு உதவியுள்ளார். அந்த நபர் தற்போது அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான இளம் வயது மாணவர்களின் கல்விக்கு ஒளி காட்டியவர்.
- தமிழ் திரையிலகில் அதிகமான வெற்றிப்படங்களை கொடுத்த நாயகி ஆவார்.