ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்கலங்கி மிகுந்த சோகத்தில் பாடிய பாடல் ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
அந்த பாடலை இளையராஜா பாடியதாக வலைதலங்களில் கூறி வருகின்றனர்.
ஆனால், அந்த பாடலை பாடவில்லை என்பது தான் உண்மை.
அப்படியென்றால் யார் பாடியிருப்பார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்..
விஜய் சேதுபதி, ஷாம், ஆர்யா இணைந்து நடித்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சதீஸ் வர்சன் என்பவர் தான் அந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.
மேலும், இந்த பாடலின் அற்புதமான வரிகளை எழுதியவர் அமரகாவியம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் அஸ்மின்.
இந்த பாடலில் அம்மா இல்லாமல் நாடே கலங்குதம்மா என்று உணர்த்தியுள்ளார்,
வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,
தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,”
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது.
நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோக உணர்வு உணர முடிகிறது. இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது