கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைப் பகுதியில் இன்று(08) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க முற்பட்ட சிறுவன் மீது கனரக வாகனம் ஒன்று மோதியதினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த விபத்தில் பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த நஷில் முஹமட் அஸ்ரிப் என்ற 2 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.