புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை யாழ்.மேல் நீதிமன்றநீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கியுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அவரைதொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதிமன்றத்தின்அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் ஆஜரான அரசசட்டவாதி நாகரட்ணம் நிஷான் நேற்று மன்றில் விண்ணப்பம் ஒன்றினைசெய்திருந்தார்.
அவர் தனது விண்ணப்பத்தில், புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தவித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டிருந்தார். மறுநாள் அவருடையவீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த பற்றைக்காட்டில் கை, கால்கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் 10 வது சந்தேக நபராக கலகே பெரிகே பியவர்த்தனராஜ்குமார் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் நடாத்தப்பட்டு வரும் புலன் விசாரணை இன்னும்முடியவில்லை. இதனால் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யவேண்டிய தேவை உள்ளது.
இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் முடிகின்ற நிலையில், ஊர்காவற்றுறை நீதவான்நீதிமன்றத்தின் ஊடாக நடாத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்காக இவரின்விளக்கமறியல் காலத்தினை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 4ம்திகதி வரைக்கும் அதிகரிக்குமாறு மன்றிடம் கோருவதாக விண்ணப்பத்தினைசமர்ப்பித்தார்.
இவ் விண்ணப்பம் தொடர்பாக கட்டளை பிறப்பித்த நீதிபதி, அரச சட்டவாதியால்மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மன்று ஏற்கின்றது.இதன்படி குறித்த சந்தேக நபரை மேலும் 3 மாதங்களுக்க விளக்கமறிலில் தடுத்து வைத்துவிசாரணை செய்வதற்கு மன்று அனுமதி வழங்குகின்றது.
தற்காலிகமாக ஊர்காவற்றுறையில் நடைபெற்று வரும் விசாரணைக்காக 04-01-2017ம் திகதி குறித்த சந்தேகநபரை ஊர்காவற்றுறை நீதவான்நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவுபிறப்பித்தார்.
இவ்வுத்தரவு தொடர்பாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்தல்விடுக்குமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்திருந்தார்.