முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரம் வரையான குடும்பங்களுக்கு காணிகள் இல்லாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், துணுக்காய், புதுக்குடியிருப்பு, வெலிஓயா மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பலவற்றுக்கு காணிகள் இல்லா நிலை காணப்படுகிறது.