எலுமிச்சை பழத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

எலுமிச்சை பழத்தில் விட்டமின் B, C, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் நிறைந்துள்ளது.

எலுமிச்சை பழமானது நமக்கு எவ்வளவு நன்மையை தருகிறதோ, அதே போல் நாம் எலுமிச்சை பழத்தை அதிகமான பயன்படுத்தி வருவதால் ஏராளமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

எலுமிச்சை பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே நாம் எலுமிச்சை ஜூஸை அதிகமாக நாம் எடுத்து கொள்வதன் மூலம் நமது பற்களின் எனாமல் அரிக்கப்படுகிறது. இதனால் பல் கூச்சம் மற்றும் பற்களின் புண்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • அமிலங்கள் நிறைந்த எலுமிச்சை பானத்தை நாம் அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் மார்பகத்தில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • அமிலத் தன்மை அதிகம் வாய்ந்த எலுமிச்சை ஜூஸை அதிகமாக குடிப்பதால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டு, அல்சர், வாந்தி, குமட்டல், வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் அமிலமானது, சிறுநீர்க் கட்டிகளை உடைத்து அதிக சிறுநீரை வெளியேற்றி, உடம்பின் அதிகமான நீரிழப்பை தன்மையை உருவாக்குகிறது.
  • அஸ்கார்பிக் அமிலத்தை அதிகமாக கொண்டுள்ள எலுமிச்சை பழத்தின் ஜூஸை நாம் அதிகமாக் குடிப்பதால், சிறுநீரக் கோளாறுகள் மற்றும் பித்தப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • நமது சருமத்தில் எலுமிச்சை சாற்றை அதிகமாக பயன்படுத்துவதால், பருக்கள் மீது அதிக எரிச்சல் ஏற்பட்டு அதிக புண்களை ஏற்படுத்துகிறது. எனவே நமது சருமத்தில் அதிகமாக எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.