அதிமுகவின் அடுத்த தலைவர் அஜீத்தா? சசிகலாவா? என்று ஒரு மலையாள பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் சிகிக்சைக்காக அப்போல்லோவில் அட்மிட் ஆனதிலிருந்தே அஜித் குறித்த வதந்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
அஜித்தை சந்திக்க மருத்துவமனையில் இருந்த முதல்வர் விரும்பினார் என்றும்,தன் அரசியல் வாரிசு அஜீத் தான்.. அதிமுகவை தலைமை தாங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார் என்று சென்ற அக்டோபர் மாதமே கன்னட ஊடகங்கள் புரளியை எழுதி தள்ளின.
ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அதிமுகவின் அடுத்த தலைவர் அஜீத், அம்மாவின் ஆசியோடு கட்சிப் பொறுப்பை, ஆட்சி பொறுப்பை ஏற்பார் என்று கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஊடகங்கள் இப்போ புதுசா புரளியை கிளப்பி உள்ளன.
முதல் விஷயம்- படங்களில் நடித்தாலே…ஒருவர் கட்சி தலைமையை ஏற்கமுடியுமா? படங்களில் நடித்ததாலும், மறைந்த முதல்வரின் அபிமானம் பெற்றவர் என்பதாலே அவர் முதல்வராக முடியுமா? கோடிக்கணக்கான விசுவாசிகளின் தலைவன் ஆக முடியுமா? என்று சமூக வலை தளங்களில் கேள்விகளும் விமர்சனங்களும் வந்துள்ளன.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் முதல்வருடன் நிழல் போல கூட இருந்த சசிகலாவையே ஏற்க மக்கள் யோசிக்கும் வேளையில்…இது சாத்தியமா? என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
ரசிகர் மன்ற ம் கூட வேண்டாம் என்று கலைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி இருக்கும் அஜித் …ஒரு பெரிய கும்பிட்ட்டை போட்டு இந்த சர்ச்சைகளில் இருந்து அவர் விலகி விடுவார் என்று அவர் தரப்பினர் சொல்லுகிறார்கள்.